Tags Posts tagged with "Jasmine Sangeetha"

Jasmine Sangeetha

– Jasmine Sangeetha | Film Theorist

சார்லி:

மலையாள திரைப்படங்கள் எப்பொழுதுமே மனதுக்கு நெருக்கமானவை. ஏதாவது ஒரு வழியில் நம் வாழ்வின் இனிய தருணங்களை நமக்கு நியாபக படுத்துபவை.அந்த வரிசையில், ஒரு குளிர் இரவின் ஜன்னலோர பேருந்து பயணம் போல இதமான அனுபவமே சார்லி.

வாழும் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும்;சந்திக்கும் ஒவ்வொரு சக மனிதனையும் கொண்டாடும் இறை மனிதனே சார்லி. அவனால் திருடனோடு சிநேகிக்க முடியும்., விலைமகளை தேவதையாக கொண்டாட முடியும்., இளம் பிராயத்தில் காதலை சொல்லாமல் பிரிந்து போனவர்களை முதுமையில் இணைத்து வைத்து சந்தோஷிக்க முடியும்.ஆனால் தன்னை காதலோடு தேடும் ஒரு பெண்ணிடம் மட்டும் கண்ணாமூச்சி ஆடி பார்க்கவே பிடிக்கும்.

சார்லியாக  துல்கர் சல்மான், ஒவ்வொரு  ஃபிரேமிலும் அவர் மீது பெருங்காதல் ஏற்பட செய்கிறார். சார்லியை போலொரு மனிதனை ஒரு முறையேனும் வாழ்வில்
சந்திக்க வேண்டுமென பேராவல்  கொள்ளசெய்கிறார். சார்லியை போல ஒவ்வொரு நிமிஷமும் முழு ஜீவனோடு வாழ வேண்டுமென உணர செய்கிறார். பார்வையாளனுக்கு இது போலொரு உணர்வு ஏற்படும் இடமே அந்த படைப்பு ஆத்மார்த்தமாகிறது.

 Charlie-flimtheorist.com

டெஸ்ஸாவாக பார்வதி. காற்றின் மேல் நடப்பது போல் வாழ்க்கையை அத்தனை சுலபமாக அணுகும் ஒரு  மெச்சூரிட்டியான பெண். சார்லியின் மேல் அவளுக்கு ஆர்வம் ஏற்பட செய்யும் அந்த கதை ஓவியம் பெரும் ஆச்சர்யம். முடிவில்லாத அந்த கதையின் முடிவை தேடும் டெஸ்ஸா கொஞ்சம் கொஞ்சமாக சார்லியின் மேல் காதல் கொள்கிறாள். அவளின் தேடல் சார்லியிடம் சென்று அடையும் வரை நம்மையும் அவளோடு விரல் பிடித்து  அழைத்து செல்கிறாள் .

 Charlie-flimtheorist.com

மலையும் மலை சார்ந்த இடமுமாக கதை பயணிக்கும் ஒவ்வொரு ஸ்தலமும் அழகு . திரையில் தோன்றும் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகம் போல சுவாரஸ்யம்.

 Charlie-flimtheorist.com

இறுதியில்  சார்லியும் டெஸ்ஸாவும் சந்திக்கும் அந்த நிகழ்வையே ஒரு திருவிழா போல நாம் எதிர் பார்த்திருக்க அந்த நிகழ்வும் ஒரு திருவிழாவாகவே நடந்தேறுகிறது.

 Charlie-flimtheorist.com

அதன்பின் அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணிப்பதாக சொல்லியிருக்கும் அந்த முடிவு இயக்குனரின் ஆக சிறந்த முற்போக்கு சிந்தனையை சொல்கிறது.

இந்த காரணங்களின் பேரில் சார்லியை பார்க்க வேண்டும் என்ற சிபாரிசு தேவையில்லை.,காரணமே இல்லாமல் சார்லியை பார்க்கலாம். பார்த்த பின் பல நூறு காரணங்களுக்காக சார்லியை நமக்கு பிடித்து போகும்.நாம் வாழும் வாழ்க்கையின் மேல்  பெரும் பிரியம் ஏற்படவும்  செய்யும்.

– Jasmine Sangeetha | Film Theorist

This column is about: Charlie, Dulquer Salman, Parvathy, Jasmine Sangeetha, Malayalam

I’m light and sound,

I’m voice and language,

I’m fragrance and flower,

I’m music and lyrics,

I coexist in the worlds of ‘Ram-Sita’ and ‘Millennials’.

I’m Jasmine Sangeetha, Chief Creative Head of  filmtheorist.com
As someone given an intriguing name at the very moment of birth, my interests are varied and unique either, they are not common for certain. Although, I’m biologically made up of blood and flesh, my soul solely comprised of cinema, music, reading and writing. I’m composed, yet assertive, and deeply rooted to contemporary and legacy values.

As a disciple of Illayarja sir, I’m indebted to him for imbibing the obsession for music in my soul. I would like to start my journey with arts, by paying respects to the god of music, Mastero Illayaraja with the lyrics penned by me:

உறக்கத்தின் முயற்ச்சியில் தாலாட்டாய்..
கிறக்கத்தில் அனிச்சையான போதையாய்..
காதலின்  மௌனத்தில் மொழியாய்.. கலவியின் தயக்கத்தில் க்ரியாஊக்கியாய்..
உணவை வெறுத்த பசியில் துளசி தீர்த்தமாய்..
தவறுக்கு தவித்த  பொழுதுகளில் அன்னை மடியாய்..
அகிலத்துக்கும் பொதுவான ஆயுள் வாயுவாய்..
சர்வமாய் சகலமாய் அணுவிலும் அசையும் இசையாய்..
பாதை தொலைத்த இருளில் நின்ற ஒரே ஒளி நீ..
உலகை இசையால் நிறைத்த இறை இசைஞானி!

This is how much, i’m obsessed about him!

– Jasmine Sangeetha|Film Theorist

 

RANDOM POSTS

0 576
- Balaji Thangapandian | BT Jason Bourne remains invincible and unprecedented, with perfect back stories relating to all the events of his past. The revenge...